அசாம்: ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிப்பு


அசாம்:  ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிப்பு
x

அசாமில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் தீயிட்டும், புல்டோசர் கொண்டும் அழிக்கப்பட்டு உள்ளன.



கரீம்கஞ்ச்,



அசாமில் கடந்த சில மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் நடந்த அதிரடி சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் தீயிட்டும், புல்டோசர் கொண்டும் அழிக்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி அசாமின் போலீசார் கூறும்போது, கோர்ட்டு உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி, கச்சார் மாவட்டத்தில் 6.214 கிலோ எடை கொண்ட ஹெராயின், 683 கிலோ கஞ்சா, 271 கிலோ இருமல் மருந்து, 6 லட்சத்து 4 ஆயிரத்து 443 யபா மாத்திரைகள் என சர்வதேச மதிப்பில் ரூ.1,920.02 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று கரீம்கஞ்ச் மாவட்டத்தில், 5.185 கிலோ கஞ்சா, 5,95,366 யபா மாத்திரைகள், 3.65 கிலோ ஹெராயின் மற்றும் 76,103 பென்சிடைல் இருமல் மருந்து பாட்டில்கள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து, கோர்ட்டு உத்தரவின் கீழ், 116 கிராம் ஹெராயின், 32 கிலோ கஞ்சா, 32 இருமல் மருந்து பாட்டில்கள் என ரூ.12 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன என ஹைலகண்டி டி.எஸ்.பி. சுராஜித் சவுத்ரி கூறியுள்ளார்.

இதுதவிர, கவுகாத்தியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், ரூ.100 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டு உள்ளன என போலீசார் கூறியுள்ளனர்.


Next Story