திரிபுராவில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்


திரிபுராவில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
x

திரிபுராவில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தலாய்,

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில், அசாம் ரைபிள்ஸ், திரிபுரா போலீசாரின் கூட்டு நடவடிக்கையில், 386 கிலோ மரிஜுவானா எனப்படும் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக அசாம் ரைபிள்ஸ் ராதாநகர் பட்டாலியன் மற்றும் திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள முங்கியகாமி போலீசார் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்த சோதனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் லாலன் ராய் என்ற டிரைவரை வாகனத்துடன் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட மரிஜுவானா போதைப்பொருள் முங்கியகாமி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story