சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு; வெளிநாட்டவர் உள்பட 4 பேர் குஜராத்தில் கைது


சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு; வெளிநாட்டவர் உள்பட 4 பேர் குஜராத்தில் கைது
x

குஜராத்தில் பயங்கரவாத ஒழிப்பு படை நடத்திய அதிரடி வேட்டையில், சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வதோதரா,

நாட்டின் அரபிக்கடலை ஒட்டி எல்லை பகுதியில் அமைந்த குஜராத் மாநிலத்தில், கடலோர நகரான போர்பந்தரில் பயங்கரவாத உறுப்பினர்களின் செயல்பாடுகள் காணப்படுகின்றன என உளவு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, குஜராத்தின் பயங்கரவாத ஒழிப்பு படை (ஏ.டி.எஸ்.) தீவிர சோதனையில் ஈடுபட்டது. இதற்கான பணியில் அந்த படையின் சிறப்பு குழுவினர் ஈடுபட்டனர்.

டி.ஐ.ஜி. தீபன் பத்ரன் தலைமையில், எஸ்.பி. சுனில் ஜோஷி, போலீஸ் துணை சூப்பிரெண்டு கே.கே. பட்டேல், மற்றொரு போலீஸ் துணை சூப்பிரெண்டு சங்கர் சவுத்ரி மற்றும் பிற உயரதிகாரிகள், கடந்த சில நாட்களாக போர்பந்தர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த ரகசிய பணியில், ஐ.ஜி. உள்ளிட்ட உயரதிகாரிகளும் ஈடுபட்டனர் என யூகங்கள் வெளிவந்தன. இதில், பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய 4 பேரை படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் நடந்த விசாரணையில், வெளிநாட்டவர் ஒருவரும் இதில் ஈடுபட்டதும், சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story