தார்வார் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் 50 வீடுகளை இடிக்க முயற்சி


தார்வார் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் 50 வீடுகளை இடிக்க முயற்சி
x

தார்வார் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் 50 வீடுகளை இடிக்க முயற்சித்ததால் கோர்ட்டு ஊழியர்கள் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி ரெயில் நிலையம் அருகே சிக்காவி சால் என்ற பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். அந்த குடும்பங்கள் வசிக்கும் நிலம் ஹாவேரி மாவட்டம் சிக்காம்வியை சேர்ந்தவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அவருக்கு, அங்கு குடியிருந்தவர்கள் நிலத்திற்கான வாடகை கொடுத்துள்ளனர். பின்னர் நாளடைவில் வாடகை கொடுக்காமல், மாநகராட்சிக்கு சொத்துவரி கட்டி வந்துள்ளளனர். இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர், தார்வார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தார்வார் ஐகோர்ட்டு நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்ககோரியும், அதனை காலி செய்யும்படி அங்கு குடியிருந்தவர்களுக்கு 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் நோட்டீஸ் அனுப்பியும் குடியிருப்பவர்கள் நிலத்தை காலி செய்யவில்லை.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கோர்ட்டு ஊழியர்கள், போலீசாருடன் வந்து பொக்லைன் எந்திர வாகனத்துடன் 50 வீடுகளை இடிக்க முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசார், கோர்ட்டு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு முன்னாள் மேயர் வெங்கடேஷ் மேஸ்திரி, கோர்ட்டு ஊழியர்கள்-போலீசாரிடம் நிலத்தின் உரிமையாளரை நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள், போலீசார் வீடுகளை இடிக்கும் முயற்சியை கைவிட்டு புறப்பட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story