பஜ்ரங்தள பிரமுகரை கொல்ல முயற்சி; 2 பேர் கைது


பஜ்ரங்தள பிரமுகரை கொல்ல முயற்சி; 2 பேர் கைது
x

பாலேஹொன்னூரில், பஜ்ரங்தள பிரமுகரை கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஹொன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷசாங். இவர் பஜ்ரங்தள பிரமுகர் ஆவார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், சுரேஷ், சுரக்‌ஷித் மற்றும் சரண் ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதன் காரணமாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷசாங்கை, காரில் வந்த ரஞ்சித் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து அரிவாள், கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

இதுபற்றி என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரக்‌ஷித், சரண் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

1 More update

Next Story