மதமாற்றம் செய்ய முயற்சி; 5 பேர் கைது


மதமாற்றம் செய்ய முயற்சி; 5 பேர் கைது
x

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவில் மதமாற்றம் செய்ய முயன்றதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மண்டியா-

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா கலாமுத்தானதொட்டி கிராமத்தில் வேறு மதத்தை சேர்ந்தவர்கள், அப்பகுதி மக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அப்பகுதியினர் சிலர் துண்டு பிரசுரம் வினியோகித்த 5 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் கலாமுத்தானதொட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 5 பேரை விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், மதம் மாற்ற முயன்றது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் 5 பேர் மீதும் மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story