வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி; புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்


வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி; புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
x

வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி,

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுவை கடற்கரையில் நடந்தது. நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமி சுடுமண் பொம்மைகள் செய்து, அதில் தேசியக்கொடியை ஏற்றினார்.

இதைத்தொடர்ந்து கடற்கரைக்கு வந்த சிறுவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியை வழங்கினார். வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார்.


Next Story