காட்டு யானைகள் அட்டகாசத்தால் வாழை, காபி பயிர்கள் நாசம்


காட்டு யானைகள் அட்டகாசத்தால் வாழை, காபி பயிர்கள் நாசம்
x

குடகில் காட்டுயானைகள் அட்டகாசத்தால் வாழை, காபி பயிர்கள் நாசமடைந்துள்ளது.

குடகு:-

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகாவில் கிருகூர் மற்றும் மேட்டூர் கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இதனால் காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதிக்குள் இருந்து கிருகூர், மேட்டூர் கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதுடன், காபி, வாழை, வெற்றிலை, தென்னை உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்திவிடுகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்கும்படி வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்ைக வைத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கிருகூர், மேட்டூர் கிராமங்களுக்குள் நேற்று முன்தினம் நுழைந்த காட்டு யானைகள் வாழை மரங்களை முறித்து எரிந்தன. மேலும் காபி செடிகளை காலால் மிதித்து நாசப்படுத்தின. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் திடீரென போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்தனர். அப்போது விவசாயிகள் காட்டுயானைகள் நடமாட்டத்தை நிரந்தரமாக தடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story