மதுக்கடையின் ஷெட்டரை துப்பாக்கியால் சுட்ட போதை ஆசாமிகள்


மதுக்கடையின் ஷெட்டரை  துப்பாக்கியால் சுட்ட போதை ஆசாமிகள்
x

மதுக்கடையின் ஷெட்டரை. போதை ஆசாமிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

சிக்கமகளூரு: கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே-பனகல் சாலையில் மதுக்கடை ஒன்று உள்ளது. இந்த மதுக்கடையில், அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ், ஸ்ரீவர்ஷன் ஆகிய 2 பேரும் மதுபானம் அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் மது அருந்தியது போதாமல் மீண்டும் மதுக்கடைக்கு மதுபானம் அருந்த வந்துள்ளனர். ஆனால் மதுக்கடை மூடப்பட்டிருந்தது. இதனால் அவர்கள், குடிபோதையில் கடையை திறக்கும்படி ஷெட்டரை தட்டியுள்ளனர். பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள், நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து ஷெட்டரை நோக்கி சுட்டனர்.

இதில் ஷெட்டரின் சிறிய பகுதி சேதமடைந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் ஸ்ரீவர்ஷன் என்பவரை மூடிகெரே போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ் என்பவரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story