எனது ஆட்சிக்கு காங்கிரசின் நற்சான்றிதழ் தேவை இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவேசம்


எனது ஆட்சிக்கு காங்கிரசின் நற்சான்றிதழ் தேவை இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆவேசம்
x

எனது ஆட்சிக்கு காங்கிரசின் நற்சான்றிதழ் தேவை இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

எனது ஆட்சிக்கு காங்கிரசின் நற்சான்றிதழ் தேவை இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

ஆதாரம் கிடையாது

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனது தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்து ஓராண்டு ஆவதையொட்டி ஜனோத்சவா பெயரில் மாநாடு நடத்துகிறோம். இதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஊழல் வழக்கில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் விசாரணையை எதிர்கொள்கிறார். சித்தராமையா தலைமையில் 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது ஊழல் நடைபெற்றதால் மக்கள் அக்கட்சியை தோற்கடித்தனர்.

வருகிற தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரும். காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை நாங்கள் வரும் நாட்களில் பகிரங்கப்படுத்துவோம். காங்கிரஸ் எங்கள் மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கிடையாது. அவர்கள் குற்றச்சாட்டை கூறிவிட்டு ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். எனது ஆட்சிக்கு காங்கிரசின் நற்சான்றிதழ் தேவை இல்லை. மக்களின் நற்சான்றிதழ் கிடைத்தால் போதும்.

மிகப்பொிய சதித்திட்டம்

மங்களூருவில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அப்பாவி நிர்வாகி கொலை செய்யப்பட்டதால் தொண்டர்கள் ஆக்ரோசம் அடைந்துள்ளனர். அனைவரும் அமைதி காக்க வேண்டும். இந்த கொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளது. சமுதாயத்தில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த சம்பவத்தின் நோக்கம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story