கொரோனா தொற்றால் பாதிப்பு: மு.க.ஸ்டாலின் விரைவாக குணம் அடைய பசவராஜ் பொம்மை வாழ்த்து

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் விரைவாக குணம் அடைய பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிப்பு: மு.க.ஸ்டாலின் விரைவாக குணம் அடைய பசவராஜ் பொம்மை வாழ்த்து
Published on

பெங்களூரு:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமாக இருப்பதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார். விரைவாக குணம் அடைய வாழ்த்து கூறினார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் விரைவாக குணம் அடைய வாழ்த்துவதாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் விரைவாக குணம் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவர் விரைவாக குணம் அடைந்து மக்கள் பணிகளை தொடந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com