பள்ளி, கல்லூரிகள் முன்பு பீடி, புகையிலை பொருட்கள் விற்ற 646 பேர் மீது வழக்கு; போலீசார் அதிரடி


பள்ளி, கல்லூரிகள் முன்பு பீடி, புகையிலை பொருட்கள் விற்ற 646 பேர் மீது வழக்கு; போலீசார் அதிரடி
x

சிவமொக்காவில் பள்ளி, கல்லூரிகள் முன்பு பீடி, புகையிலை பொருட்கள் விற்ற 646 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் பீடி, சிகரெட் எடுத்து வருவதும், போதை பொருட்களை பயன்படுத்திவிட்டு பொது இடங்களில் தள்ளாடி வருவதுமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை அறிந்த போலீசார் நேற்று சிவமொக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஓட்டல்கள் அருகேயுள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் பதுக்கி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பீடி, சிகரெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக 646 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ரூ.64 ஆயிரத்து 600 அபராதம் வசூலித்தனர். இதுகுறித்து சிவமொக்கா மாவட்ட போலீசார் தரப்பில் கூறியதாவது:-

சிவமொக்கா மாவட்டத்தில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதாக பள்ளி, கல்வித்துறை வாயிலாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. மேலும் சமூக வலைத்தளங்களிலும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. எ

னவே இனி பள்ளி, கல்லூரிகளையொட்டி 100 மீட்டர் தூரத்திற்குள் பெட்டிக்கடைகள் வைக்க கூடாது. ஓட்டல்களில் விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 646 பேர் மீது கோட்பா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story