பெங்களூரு மாநகராட்சி தேர்தல் பணிகள் செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கப்படும்- ஐகோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் தகவல்


பெங்களூரு மாநகராட்சி தேர்தல் பணிகள் செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கப்படும்- ஐகோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் தகவல்
x

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் பணிகள் செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கப்படும் என்று ஐகோர்ட்டில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகள் மறு வரையறைக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு குறித்து கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஹேமந்த்சந்தன் கவுடர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பான பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் 22-ந் தேதிக்கு பிறகு தொடங்கப்படும் என்றும், அதற்குள் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிக்கப்படும் என்றும் கூறினார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 29-ந் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story