வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: 'வெனிஸ் நகரமாக மாறிவிட்டது' கலாய்க்கும் நெட்டிசன்கள்
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகள் குளங்களாக மாறி உள்ளன. சாலையில் நீச்சல் அடித்து குளிக்கும் நிலை உள்ளது. பெங்களூருவின் இந்த நிலையை நெட்டின்சன்கள் கலாய்த்து உள்ளனர். டுவிட்டரில் பெங்களூரு தற்போது வெனிசாக மாறி உள்ளதாக ஒருவர் கூறியுள்ளார். பெங்களூரு நகரை வோண்டர்லாவாக மாற்றிய மாநகராட்சிக்கு நன்றி என்று ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அன்ட்ரிபன் சான்யல் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மழைநீர் தேங்கிய பெங்களூரு விமான நிலைய புகைப்படத்தை பதிவிட்டு பெங்களூரு விமான நிலையத்தின் இன்றைய நிலை, இந்தியாவின் உள்கட்டமைப்பு நிலையை பார்த்து அழுவது போல உள்ளது என்று கூறியுள்ளார். கம்ரன் என்பவர் பெங்களூருவை ஐரோப்பிய தரத்திற்கு மாற்றிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நன்றி என்று கூறியுள்ளார். இதுபோல பல நெட்டிசன்களும் பெங்களூருவின் நிலை பற்றி டுவிட்டரில் கலாய்த்து வருகின்றனர்.