சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு 'சீல்' வைப்பு


சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 29 March 2023 5:00 AM GMT (Updated: 29 March 2023 5:03 AM GMT)

பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மங்களூரு-

பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக சுள்ளியாவில் பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரவீன் நெட்டார் கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ெநட்டார். பா.ஜனதா பிரமுகரான இவர் கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தொடர்புடைய ஷபி பெல்லாரே உள்பட 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பி.எப்.ஐ. அலுவலகத்துக்கு 'சீல்'

மேலும் பிரவீன் நெட்டார் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் பெங்களூரு என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் 1,500 பக்க குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், சுள்ளியாவில் செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

(பி.எப்.ஐ.) அமைப்பின் அலுவலகத்துக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் 'சீல்' வைத்துள்ளனர்.சுள்ளியா டவுன் காந்திநகரில் உள்ள வணிக வளாகத்தில் முதல் தளத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகத்தில் வைத்து பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த அலுவலகத்துக்கு 'சீல்' வைத்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story