குண்டு துளைக்காத வாகனத்தில் யாத்திரை செல்ல முடியாது - ராகுல் காந்தி


குண்டு துளைக்காத வாகனத்தில் யாத்திரை செல்ல முடியாது - ராகுல் காந்தி
x

பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'நான் இந்திய ஒற்றுமை பயணம் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளேன். இதை நான் குண்டு துளைக்காத வாகனத்தில் மேற்கொள்ள வேண்டும் என அரசு விரும்புகிறது. இதுதான் பாதுகாப்பு நெறிமுறை எனவும், இதை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அவர்கள் கூறுகிறார்கள். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நான் ஒரு குண்டு துளைக்காத காரில் செல்ல விரும்புகிறார்கள். ஆனால் அதை என்னால் ஏற்க முடியாது. இந்த யாத்திரையை குண்டு துளைக்காத வாகனத்தில் எப்படி மேற்கொள்ள முடியும்?' என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பாதுகாப்பு நெறிமுறைகள் விவகாரத்தில் தனக்கும், பா.ஜனதா தலைவர்களுக்கும் இடையே வேறுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அவர்கள் திறந்த வாகனத்தில் சாலை பேரணிகளை நடத்துவதாகவும், இது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.

பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்காக தன் மீது அரசு வழக்கு போட வாய்ப்பு இருப்பதாக கூறிய ராகுல் காந்தி, அதை அவர்கள் செய்யட்டும் என்றும் கூறினார்.


Next Story