பாஜக அலுவலகத்தில் இருந்த மக்களை நோக்கி ராகுல் காந்தி கையசைத்து ஆரவாரம் செய்த காட்சி வைரல்..!


பாஜக அலுவலகத்தில் இருந்த மக்களை நோக்கி ராகுல் காந்தி கையசைத்து ஆரவாரம் செய்த காட்சி வைரல்..!
x

பாஜக அலுவலகத்தில் நின்ற மக்களை நோக்கி ராகுல்காந்தி ஆரவாரம் செய்த காட்சி வைரலாகி வருகிறது.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானில் ஜாலவார் நகரம் வழியாக இன்று காலை தனது பாத யாத்திரையை தொடங்கினார். அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட், பல அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ராகுல்காந்தியுடன் சென்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி பாத யாத்திரையை பார்ப்பதற்காக ஜாலவார் நகர பாஜக அலுவலகத்தின் மாடியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து அவர் கையசைத்து முத்தம்(ப்ளையிங் கிஸ்) கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பதாகைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றின் பின்னால் நின்ற மக்களை நோக்கி ராகுல்காந்தி ஆரவாரம் செய்த காட்சி வைரலாகி வருகிறது.



Next Story