பா.ஜ.க.வினருக்கு பறக்கும் முத்தம் தந்த ராகுல் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலகலப்பு

பா.ஜ.க.வினருக்கு பறக்கும் முத்தம் தந்த ராகுல் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலகலப்பு
x
தினத்தந்தி 7 Dec 2022 1:45 AM IST (Updated: 7 Dec 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பயணத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பயணத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் நடைபயணத்தை நடத்தி வருகிறார். நேற்று அவர், ஜாலவார் என்ற நகரத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். அவருடன் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோட்டாஸ்ரா, முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானோர் நடந்து சென்றனர்.

அப்போது அவர்கள் அந்த நகர பா.ஜ.க. அலுவலகத்தை கடந்து சென்றபோது, அந்த அலுவலகத்தின் மொட்டை மாடியில் பா.ஜ.க.வினர் ஏராளமாக கூடி நின்று, ராகுல் காந்தியின் பாதயாத்திரையை வேடிக்கை பார்த்தனர். அதைத் பார்த்த ராகுல் காந்தி உற்சாகமானார். உடனே அவர், அவர்களுக்கு சிரித்தவாறே பறக்கும் முத்தங்களை அளித்தார். இதனால் அவருடன் சென்ற தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்தனர்.

Next Story