103 வயதில் மூன்றாவது திருமணம் செய்த முதியவர்

திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், ஓராண்டு கழித்து அவர்களின் வீடியோ வெளியாகியிருக்கிறது.
103 வயதில் மூன்றாவது திருமணம் செய்த முதியவர்
Published on

மத்திய பிரதேச மாநிலம், போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்தவர் ஹபிப் நாசர் (வயது 103). சுதந்திர போராட்ட வீரரான இவர், முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி காலமான நிலையில் தனியாக வசித்து வந்தார். தனக்கு ஆறுதலாக, அன்புடன் கவனிப்பதற்கு யாரும் இல்லாததால் மனவருத்தத்தில் இருந்த அவர், 49 வயது நிரம்பிய பிரோஸ் ஜகான் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், ஓராண்டு கழித்து அவர்களின் வீடியோ வெளியாகியிருக்கிறது. திருமணம் முடிந்து புது மனைவியை ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹபிப் நாசருக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவிப்பதும், அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

புதிய மனைவியுடன் வீட்டிற்கு வந்தபோது அப்பகுதியில் உள்ள சிலர் அவரைப் பார்த்து சிரித்துள்ளனர். இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com