பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு வரும் ஜனவரி 7-ம் தேதி முதல் தொடக்கம்?
பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு வரும் ஜனவரி 7-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன்.
பாட்னா,
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் வலியுறுத்தினார். அதன் பிறகு நிதிஷ்குமார் பாஜகவில் இருந்து விலகி தாணு கட்சி ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரி ஆனார்.
இந்நிலையில் பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை புத்தாண்டில் வருகிற 7ம் தேதி முதல் கணக்கெடுக்க தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன். 500 கோடி ரூபாய் செலவில் 2 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள், 3 லட்சம் பேர் ஈடுபட உள்ளதாகவும் 2023 மே மாதத்தில் பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story