பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்


பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் பயணித்த ஹெலிகாப்டர்  அவசரமாக தரையிறக்கம்
x

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் அவசரமாக தரையிறங்கியது.

பீகார் நிலவும் வறட்சி நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் இன்று அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் பயணம் மேற்கொண்டார். அப்போது, திடீரென உருவான மோசமான வானிலை ஏற்பட்டதால் நிதிஷ் குமாரின் ஹெலிகாப்டர் கயா மாவட்டதில் அவசரமாக தரையிறக்கப்பட்டது இதனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. வானிலை சீரான பின் ஹெலிகாப்டர் மீண்டும் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story