அவுரங்காபாத்தில் ஆயுதங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி

image courtesy: ANI
பீகாரில் போலீசார் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர்.
அவுரங்காபாத்,
பீகாரில் போலீசார் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத்துறை தகவலின் அடிப்படையில் பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கரிபா டோபா பகுதியில் கோப்ரா அமைப்பு (CoBRA) மற்றும் பீகார் போலீசார் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இரண்டு 9 எம்எம் கைத்துப்பாக்கிகள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கி மேகசீன்கள் (magazines), இரண்டு இன்சாஸ் (INSAS) மேகசீன்கள் மற்றும் 120 சுற்றுகள் 5.56 இன்சாஸ் ஆகியவை மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story






