பீகார்: காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் - வீடியோ
பீகாரில் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா,
பீகாரில் காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னாவில் உள்ள சிபாரா பகுதியில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளம்பெண்ணை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதில் கழுத்தில் காயமடைந்த மாணவி அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். காயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய இளைஞரை தேடி வருகின்றனர். காதல் விவகாரம், இளம்பெண் சுடப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.