பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு - உத்தரபிரதேச பா.ஜ.க நிர்வாகி

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என்று அதிரடியாக அறிவித்தார் உத்தரபிரதேச பா.ஜ.க நிர்வாகி.
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு - உத்தரபிரதேச பா.ஜ.க நிர்வாகி
Published on

 பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிலாவல் பூட்டோவுக்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

அப்போது அங்கு பேசிய பா.ஜ.க. உள்ளூர் நிர்வாகியும், மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால், 'பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவின் தலையை துண்டித்து கொண்டுவருபவர்களுக்கு நான் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன்' என்று அதிரடியாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் நன்கு அறிந்துதான் அவ்வாறு பேசியதாகவும், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com