பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளராக சுனில் பன்சால் நியமனம்
பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளராக சுனில் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. அமைப்பு பொதுச் செயலாளராக இருந்தவர் சுனில் பன்சால். இவர், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநில கட்சி பொறுப்பாளராகவும் பன்சால் இருப்பார்.
உத்தரபிரதேசத்தில் பன்சாலுக்கு பதிலாக அமைப்பு பொதுச் செயலாளராக தரம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளராக கரம்வீர் நியமிக்கப்பட்டுள்ளார் என இக்கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story