கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் போட்டியின்றி தேர்வு

கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் எம்.எல்.சி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் எம்.எல்.சி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
போட்டியின்றி தேர்வு
கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தவர் சி.எம்.இப்ராகிம். அவர் தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மேல்-சபையில் ஒரு இடம் காலியாக இருந்தது. அந்த ஒரு இடத்திற்கு ஆகஸ்டு 11-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி பாபுராவ் சின்சனசூர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் வேட்பாளரை நிறுத்தவில்லை. இந்த நிலையில் மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். தேர்தல் களத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் மட்டுமே இருந்தார். இதையடுத்து பாபுராவ் சின்சனசூர் மேல்-சபை உறுப்பினராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி விசாலாட்சி அறிவித்தார். இதன் மூலம் மேல்-சபையில் பா.ஜனதாவின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.
பா.ஜனதாவின் பல
அதாவது 75 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில் தற்போது பா.ஜனதாவின் பலம் 41 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 உறுப்பினர்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 8 உறுப்பினர்களும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் உள்ளனர்.