கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை - பினராயி விஜயன் பேட்டி

கேரள மாநிலத்தின் சாதனைகளை பொய்களால் மூடி மறைக்க முயல்கிறார் பிரதமர் மோடி என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை - பினராயி விஜயன் பேட்டி
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கேரள மாநிலம் காசர்கோட்டில் அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கேரளாவுக்கு எதிராகப் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஒரே குரல் எழுப்புகின்றனர். நிதி ஆயோக்கின் பொறுப்பில் இருந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்கிறார்.

சங்பரிவார் அமைப்புகளை நேரடியாக எதிர்க்க ராகுல் காந்தி முயற்சிக்கவில்லை.கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. அதை உணர்ந்து கேரளாவை அவமதித்து பொய்களை கூறி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பா.ஜ.க.வை தோற்கடிப்பதே இடது ஜனநாயக முன்னணியின் நோக்கம். கேரளாவின் ஊழல் பீகார் போன்றது என ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களை பிரதமர் மோடி இழிவுபடுத்தியுள்ளார். கேரள மாநிலத்தின் சாதனைகளை பொய்களால் மூடி மறைக்க முயல்கிறார் பிரதமர் மோடி என்றார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com