குஜராத்தில் 2-ஆம் கட்ட தேர்தல்: அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம்
வரும் திங்கள் கிழமை 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது
அகமதாபாத்,
182- சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் திங்கள் கிழமை அதாவது வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு சில தினங்களே இருப்பதால் குஜராத்தில் பாஜகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா என பாஜகவின் தலைவர்கள் பலரும் குஜராத்தில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஒருபக்கம் காங்கிரஸ் , ஆம் ஆத்மி கட்சியும் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் 8 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் பிற்பகலுக்குள் குஜரத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற விவரம் தெரியவந்துவிடும்