ராகுல்காந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையில் பாஜக ஈடுபட்டு வந்தது - காங்கிரஸ் மூத்த தலைவர்


ராகுல்காந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையில் பாஜக ஈடுபட்டு வந்தது - காங்கிரஸ் மூத்த தலைவர்
x

ராகுல்காந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையில் பாஜக ஈடுபட்டு வந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் தெரிவித்தார்.

இந்தூர்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடக்கிய பாரத் ஜோடோ யாத்திரை இன்று 81வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்தியபிரதேச மாநிலத்தில் தற்போது யாத்திரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேசி வேணுகோபால் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக ராகுல்காந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையில் பாஜக ஈடுபட்டு வந்தது. ஆனால், தற்போது ராகுல்காந்தியின் உண்மை முகத்தை மக்கள் பார்க்கின்றனர். ராகுல்காந்தி படித்தவர், இரக்கமுள்ளவர், முடிவெடுக்கக்கூடியவர். பிரதமர் யார்? நாட்டின் தலைவர் நாட்டு மக்களால் முடிவு செய்யப்படுபவர். மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. பாரத் ஜோடோ யாத்திரை ராகுல்காந்தியை பிரதமராக மேற்கொள்ளப்படவில்லை. யாத்திரையின் மதிப்பை குறைக்க வேண்டாம்' என்றார்.


Next Story