கர்நாடகத்தில் பா.ஜனதா அமைதியை சீர்குலைக்கிறது- காங்கிரஸ்
கர்நாடகத்தில் பா.ஜனதா அமைதியை சீர்குலைக்கிறது. உத்தரபிரதேசத்தில் விரோத அரசியலை இங்கே இறக்குமதி செய்வது சரியல்ல என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகம் போன்ற வளமிக்க மாநிலங்கள் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. பழிவாங்கும் மற்றும் விரோத அரசியலால் உத்தரபிரதேசம் வளராமல் உள்ளது. கர்நாடகம் அமைதியாக மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக இருப்பதால் நாட்டிலேயே 2-வது அதிக வரி வருவாய் வழங்குகிறது.
கர்நாடகத்தில் பா.ஜனதா அமைதியை சீர்குலைக்கிறது. உத்தரபிரதேசத்தில் விரோத அரசியலை இங்கே இறக்குமதி செய்வது சரியல்ல. 40 சதவீத கமிஷன் மற்றும் 60 சதவீத விலைவாசி உயர்வை நிறுத்தினால் நிறுத்திவிட்டு வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும்" என்றார்.
Related Tags :
Next Story