மராட்டிய மேலவை தேர்தலில் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. காலமானார்


மராட்டிய மேலவை தேர்தலில் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. காலமானார்
x

மராட்டிய மேலவை தேர்தலில் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. லட்சுமண் ஜக்தப் உடல்நல குறைவால் இன்று காலமானார்.புனே,


மராட்டியத்தில் பிம்ப்ரி-சின்ச்வாட் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. லட்சுமண் ஜக்தப். வயது 59. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

கடந்த சில நாட்களுக்கு முன் புனே தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. முக்தா திலக் காலமானார். அவர்கள் இருவரும் பல மாதங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

மராட்டியத்தில் ஜூன் மாதத்தில் மேலவை தேர்தல் நடந்தது. இதில், ஜக்தப் மற்றும் திலக் ஆகிய இருவரையும் வாக்களிக்க செய்வதற்காக ஆம்புலன்சில் அழைத்து வந்தனர்.

உடல்நலம் பாதித்த அவர்கள் வாக்களிப்பதற்காக ஆம்புலன்சில் வந்து சென்றனர். நீண்டகாலம் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் திலக் காலமானார். இதனை தொடர்ந்து ஜக்தப் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

இதனால், புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய இரு தொகுதிகளும் காலியாகி உள்ளன. ஜக்தீப்பின் மறைவுக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story