பாஜக நாடாளுமன்ற குழு மாற்றியமைப்பு: வானதி ஸ்ரீனிவாசன் உட்பட 11 பேர் புதிதாக தேர்வு
பாஜகவின் நாடாளுமன்ற குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பாஜகவின் நாடாளுமன்ற குழு மாற்றியமைக்கப்பட்டு 11 பேர் கொண்ட புதிய குழுவை பாஜக அறிவித்துள்ளது. பாஜகவில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜேபி நட்டா தலைமையிலான குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா, மக்களவை எம்.பி. சத்யநாராயணன் ஜட்டியா, பாஜக தேசிய ஓபிசி மோர்சா தலைவர் கே.லட்சுமணன், தேசியச் செயலர் சுதா யாதவ், சத்தியநாராயண் ஜாதியா, பூபேந்திர யாதவ், தேவேந்திர பட்னாவிஸ், ஓம் மாத்தூர், பி. எல்.சந்தோஷ், தமிழகத்தை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் புதிதாக நாடாளுமன்ற குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய மந்திரி நிதின் கட்கரி, ம.பி. முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாடாளுமன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாறுதலை சமூக ரீதியாகாவும் பிராந்திய ரீதியாகவும் அதிக பிரதிநிதித்துவம் உடையதாக மாற்றவே இந்தப் புதிய நியமனங்களை மேற்கொண்டுள்ளதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.