திரிபுரா மாநிலங்களவை இடைத்தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் டெப் போட்டி


திரிபுரா மாநிலங்களவை இடைத்தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் டெப் போட்டி
x

திரிபுராவில் மாநிலங்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் டெப் போட்டியிடுகிறார்.

அகர்தலா,

திரிபுரா மாநிலத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் டெப் போட்டியிடுகிறார்.

இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் அருண்சிங் வெளியிட்டுள்ளார். அரியானா மாநில பா.ஜ.க. பொறுப்பாளராக பிப்லாப் டெப் இருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.

திரிபுராவில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் பிப்லாப் டெப் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.


Next Story