குஜராத் தேர்தலுக்காக சி.ஏ.ஏ-வை பாஜக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

குஜராத் சட்டசபை தேர்தலுக்காக சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை பாஜக பயன்படுத்துகிறது என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம்சுமத்தி உள்ளார்.
குஜராத் தேர்தலுக்காக சி.ஏ.ஏ-வை பாஜக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் வரும் போது எல்லாம் பாஜக சிஏஏ மற்றும் என்ஆர்சியை அமல்படுத்துவோம் என்று பேசுகிறது. இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இன்றும் ஒன்றரை ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. எனவே பாஜக மீண்டும் சிஏஏ-வை பற்றி பேசுகிறது.

நாட்டின் குடிமக்கள் யார் என்று முடிவு செய்வதற்கு பாஜக யார்? மதுவா சமூகத்தினர் இந்தியாவின் குடிமக்கள் ஆவார்கள். பாஜக மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகளில் உள்ள ராஜ்பன்சீஸ் மற்றும் கூர்கா இனத்தவர்களை தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயல்கிறது. மேற்கு வங்கத்தை பிரிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் இருந்த அரசியல் சூழல், தற்போது மாறிவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை.

பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை. பாஜக பல மாநிலங்களில் ஏற்கனவே இறுதி நிலையை எட்டிவிட்டது. அதனால்தான் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களை அவதூறாக பேசி கைது செய்தும் வருகிறது." இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com