"சவப்பெட்டி" புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவமைப்பு குறித்து விமர்சனம்- பா.ஜ.க கண்டனம்


சவப்பெட்டி புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவமைப்பு குறித்து விமர்சனம்- பா.ஜ.க கண்டனம்
x

சவப்பெட்டி படத்தைப் பயன்படுத்தி உள்ளார்கள். இதைவிட அவமரியாதை என்ன? அரசியல் கட்சியின் மலிவு சிந்தனையையே இது காட்டுகிறது.

புதுடெல்லி

புதிய பாராளுமன்றம் திறப்பு விழா தொடர்பான பல்வேறு பதிவுகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவமைப்பை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு பேசிய ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை பா.ஜ.க. சாடியுள்ளது.

சவப்பெட்டி உங்கள் எதிர்காலம் என்றால், புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இந்தியாவின் எதிர்காலம் என பா.ஜ.க. பதிலளித்துள்ளது.

சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு டுட் செய்தவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி.யும், பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை விட துரதிர்ஷ்டவசமானது என்ன. புதிய நாடாளுமன்றம் பொதுப் பணத்தில் கட்டப்பட்டது. நாடாளுமன்றத்தை நிரந்தரமாக புறக்கணிக்க ராஷ்டீரிய ஜனதா தளம் முடிவு செய்திருக்கிறதா? அவர்களின் எம்.பி.க்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து ராஜினாமா செய்வார்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"சவப்பெட்டி படத்தைப் பயன்படுத்தி உள்ளார்கள். இதைவிட அவமரியாதை என்ன? அரசியல் கட்சியின் மலிவு சிந்தனையையே இது காட்டுகிறது. புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் சுப நாள், நாட்டுக்கே பெருமை சேர்க்கும் நாள். இப்படி டுவீட் செய்தவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், 2024ல் நாட்டு மக்கள் உங்களை ஒரே சவப்பெட்டியில் புதைப்பார்கள், ஜனநாயகத்தின் புதிய கோவிலுக்குள் நுழைய வாய்ப்பளிக்க மாட்டார்கள். நாடாளுமன்ற கட்டிடம் நாட்டிற்கு சொந்தமானது என்றும்,

ஆர்ஜேடியின் அதிகாரபூர்வ கைப்பிடியில் இருந்து இந்த இடுகையை விளக்கிய ஆர்ஜேடியின் சக்தி சிங் யாதவ், "எங்கள் டுவீட்டில் உள்ள சவப்பெட்டி ஜனநாயகம் புதைக்கப்படுவதைப் பிரதிபலிக்கிறது. பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில், உரையாடலுக்கான இடம். ஆனால் அவர்கள் வேறு திசையில் கொண்டு செல்ல விரும்புகிறார்கள். அதை நாடு ஏற்காது. இது அரசியலமைப்பு மற்றும் பாரம்பரியத்தை மீறும் செயலாகும். அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பாராளுமன்றத்தின் தலைவர். ஜனநாயகத்தை சவப்பெட்டியில் வைக்க வேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறோம். என கூறப்பட்டு உள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்த 20 அரசியல் கட்சிகளில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தள கட்சியும் அடங்கும், பிரதமர் நரேந்திர மோடி புதிய கட்டிடத்தை ஏன் திறந்து வைக்கிறார் என்று கேள்வி எழுப்பி இருந்தது.





புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை புறக்கணித்த 20 அரசியல் கட்சிகளில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியும் அடங்கும், பிரதமர் நரேந்திர மோடி புதிய கட்டிடத்தை ஏன் திறந்து வைக்கிறார் என்று கேள்வி எழுப்பினர்.


Next Story