காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக பிரிட்ஜில் வைத்து நகர் முழுவதும் வீசிய காதலன்


தினத்தந்தி 14 Nov 2022 7:05 AM GMT (Updated: 14 Nov 2022 9:39 AM GMT)

காதலியின் கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக நகர் முழுவது எறிந்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி

ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வந்தனர். அப்போது நட்பு ஏற்பட்டு உள்லது. அவர்களது நட்பு காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஜோடி டெல்லிக்கு ஓடி அங்கு அவர்கள் மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.இவ்விவகாரம் தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது.

கடந்த மேமாதம் அப்தாப் ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளார். பின்னர் ரம்பத்தை கொண்டு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார். பின்னர் ஒரு பெரிய பிரிட்ஜ் வாங்கி அதில் வைத்து 18 நாட்களாக டெல்லி முழுவதும் அவற்றை ஒவ்வொன்றாக தூக்கி எறிந்து உள்ளார்.

இந்த நிலையில் ஷ்ரத்தாவின் குடும்பம் சமூக வலை தளங்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்தது, அவரது தந்தை அவரை பார்க்க டெல்லிக்கு வந்தார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாததால் போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் ரகசிய தகவலின் பேரில் அப்தாபை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்து உள்ளது.


Next Story