போவி சமூகத்தினர் தங்கள் தொழிலை செய்ய சட்டத்திருத்தம்; பசவராஜ் பொம்மை பேச்சு


போவி சமூகத்தினர் தங்கள் தொழிலை செய்ய சட்டத்திருத்தம்; பசவராஜ் பொம்மை பேச்சு
x

போவி சமூகத்தினர் தங்கள் தொழிலை செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

தாவணகெரேயில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

போவி சமூகம் தங்களின் கலாசார தொழிலை தொடர்ந்து மேற்கொள்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. உங்களுக்கு அதிகாரிகள் இடையூறு செய்கிறார்கள் என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. நீங்கள் உங்களின் கலாசார தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள சுற்றுச்சூழல் தொடர்பான சட்டத்திருத்தம் செய்யப்படும். வருகிற சட்டசபை கூட்டத்தொடரிலேயே இந்த திருத்தம் செய்யப்படும்.

உங்களுக்கு சிறப்பு சலுகையும் வழங்கப்படும். இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக ரூ.107 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story