முன்னாள் காதலியின் வெட்டிய தலையுடன் போலீசில் சரணடைந்த காதலன்
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் காதலியின் தலையை துண்டாக்கி காவல் நிலையத்தில் சரணடைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு
கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தின் குட்லிகி தாலுகாவில் உள்ள கண்ணபோரனையாவின் ஹட்டியில் உள்ள ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், போஜராஜா (25) என்ற நபர் தனது முன்னாள் காதலியின் தலையை துண்டித்து, அவரது தலையை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.
இதை அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் பலியானவர் நர்சிங் மாணவி நிர்மலா (21) என்பது தெரியவந்தது.நிர்மலா ஓசப்பேட்டையில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் 3ஆவது ஆண்டு படித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருடனான காதலை போஜராஜா முறித்துக் கொண்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதை அறிந்த நிர்மலா "என்னுடன் நெருக்கமாக பழகிவிட்டு வேறு பெண்ணை எப்படி திருமணம் செய்தாய், உன்னை நிம்மதியாக இருக்க விட மாட்டேன். நீயும் நானும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை உன் மனைவியிடம் கொடுக்க போகிறேன்" என போஜராஜாவிடம் வாக்குவாதம் செய்து பிளாக்மெயில் செய்ததாக தெரிகிறது.
போஜராஜா குட்லிகியில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். போலீசார் போஜராஜை கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), 450 (குற்றம் செய்வதற்காக அத்துமீறி நுழைதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
நிர்மலாவைக் கொலை செய்து தலையை வெட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் நிர்மலா தனியாக இருந்தபோது அவருடன் ஒரு கத்தியை எடுத்துச் சென்றார். பாதிக்கப்பட்ட பெண் வேறொருவரை காதலித்ததே குற்றத்தின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், போஜராஜாவும், நிர்மலா கடந்த சில ஆண்டுக்களாக காதலித்து வந்துள்ளனர். நிர்மலா ஒசப்பேட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் 3 வது ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போஜராஜா, ஒரு சில காரணங்களால் நிர்மலாவுடனான காதலை முறித்துக் கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நிர்மலா, போஜராஜாவுடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும், தங்கள் காதல் விவகாரம், நெருக்கமான புகைப்படங்களையும் அவரது புதுமனைவியிடம் சொல்லி விடுவதாக போஜராஜாவை மிரட்டியுள்ளார்.
இதன் காரணமாக மிகவும் மன உளைச்சலில் இருந்த போஜராஜா, 3 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் இருந்து நிர்மலா சொந்த ஊருக்கு வந்திருக்கும் தகவலை அறிந்துள்ளார். செல்போனில் பிளாக்மெயில் செய்து வந்த நிர்மலாவின் வீட்டுக்கு நேரடியாக சென்ற போஜராஜா தான் எடுத்து வந்த அரிவாளை கொண்டு தலையை துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் வெட்டப்பட்ட அந்த தலையை எடுத்துக்கொண்டு போஜராஜா கானஓசஹள்ளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.