போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி


போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
x

போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

போர் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த சகோய் வகை விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவும் வகையிலான தொழில்நுட்பத்தை டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்துள்ளது.

இந்த ஏவுகணை விமானப்படைக்கு சொந்தமான எஸ்.யு-30 ரக போர் விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது நிர்ணயித்த. தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ. வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story