தெலங்கானாவில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்


தெலங்கானாவில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்
x
தினத்தந்தி 6 Oct 2023 11:54 AM IST (Updated: 6 Oct 2023 1:24 PM IST)
t-max-icont-min-icon

தெலங்கானாவில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா,

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தனர். இதையடுத்து தெலங்கானாவில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்படும் என முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் அறிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும் 1 முதல் 10-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தெலங்கானா மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோர் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை இன்று காலை துவக்கி வைத்தனர்.

3,400 கோடி செலவில் செயல்படுத்தும் இத்திட்டத்தால் 43,000 அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைய உள்ளனர்.

1 More update

Next Story