மராட்டியத்தில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் - பா.ஜனதா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


மராட்டியத்தில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் - பா.ஜனதா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x

மராட்டியத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

முதல்-மந்திரியுடன் சந்திப்பு

நடிகை துனிஷா சர்மா கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலன் சீசான் கானை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை துனிஷா சர்மாவின் தற்கொலை சம்பவத்தை 'லவ் ஜிகாத்' கோணத்தில் விசாரிக்க வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. அதுல் பாத்கல்கர் அரசை வலியுறுத்தினார்.

இந்தநிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே, சகால் இந்து அமைப்பை சேர்ந்த பெண் நிர்வாகிகளுடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தார்.

மதமாற்ற தடை சட்டம்

அப்போது அவர் மராட்டியத்தில் மதமாற்ற தடை சட்டம், லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக நிதேஷ் ரானே கூறுகையில், "கர்நாடகம், குஜராத், உத்தரபிரதேசத்தில் கொண்டு வரப்பட்டது போல மராட்டியத்திலும் மதமாற்ற தடை சட்டம், லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியை வலியுறுத்தினோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டந்தோறும் சகால் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்" என்றார்.


Next Story