உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்: தொகுதிக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல்
உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த தொகுதிக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் கட்டாவ்லி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. விக்ரம் சிங்குக்கு, 2013-ம் ஆண்டு நடந்த முசாப்பர்நகர் கலவர வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து கட்டாவ்லி தொகுதிக்கு டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதே நாளில் ஏற்கனவே முலாயம் சிங் யாதவின் மெயின்புரி எம்.பி. தொகுதி மற்றும் 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.
அதே நாளில்தான் குஜராத் சட்டசபைக்கு 2-ம் கட்டதேர்தலும் நடக்க உள்ளது.
Related Tags :
Next Story