பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அரசு முடிவு


பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 27 July 2022 11:22 AM GMT (Updated: 27 July 2022 11:25 AM GMT)

பிஎஸ் என் எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும், சேவைகளை விரிவுபடுத்தவும் ரூ 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்க எடுத்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். பிஎஸ் என் எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும் சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

பிபிஎன்.எல் & பிஎஸ் என் எல் ஆகிய நிறுவனங்களை இணைக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது

மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஸ்னவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

5 ஜி அலைக்கற்றை இதுவரை ரூ 1.49 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 9-வது சுற்று ஏலம் நடைபெற்று கொண்டிருக்கிறது என தொலைதொடர்பு மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.


Next Story