ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூரு வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூரு வந்த  விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
x

ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூரு வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்ப்பூரில் இருந்து விமானம் ஒன்று 174 பயணிகளுடன் வந்தது. அந்த விமானத்தின் கழிவறையில் இருந்த ஒரு காகிதத்தில் 'வெடிகுண்டு உள்ளது, எனவே விமானத்தை தரையிறக்க வேண்டாம்' என எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விமான ஊழியர்கள் உடனடியாக கெம்பேகவுடா விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறையின் அறிவுரையின்படி விமானம் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். மேலும் அந்த விமானத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். ஆனால் விமானத்தில் வெடிகுண்டு சிக்கவில்லை. அப்போது தான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியது வெறும் புரளி என்பது தெரியவந்தது. ஆனால் காகிதத்தில் எழுதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று தெரியவில்லை. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தனித்தனியாக காகிதங்களில் கைப்பட எழுதி வாங்கி அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின்பேரில் 2 பயணிகளை பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story