ஓட்டலில் கள்ளக்காதலனுடன் மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவர் நடு ரோட்டில் அடி-உதை

தபன் தனது மனைவி மற்றும் உள்ளூர் தலைவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது புகார் அளித்தார்.
ஓட்டலில் கள்ளக்காதலனுடன் மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவர் நடு ரோட்டில் அடி-உதை
Published on

லக்னோ

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அமன் இவர்ஒரு ஓட்டலில் வரது மனைவியை கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக பிடித்தார். பிடிபட்ட்வர் உள்ளூர் தலைவர் ஆவார். மனிவியையும் உள்ளூர் தலைவரையும் தமன் மற்றும் அவரது நண்பர்கள் நடு ரோட்டில் அடித்து உதைத்தனர்.

தபன் தனது மனைவி மற்றும் உள்ளூர் தலைவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசாரிடம் தமன் கூறியதாவது:- தனது மனைவி நீண்ட நாட்களாக இதை செய்து வருகிறார் ஒவ்வொரு நாளும் அவர் இப்படி வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

அவர் அப்படி ஏதாவது செய்வார் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் என் நண்பர்களை அவரை கண்காணிக்கச் சொன்னேன். நான் ஓட்டலை அடைந்து 2-3 மணி நேரம் காத்திருந்து அவர்களைப் பிடித்தேன்," என்று அவர் கூறினார்.

என் மனைவி என்னைக் கொன்றுவிடுவதாகவும், பல சந்தர்ப்பங்களில் என் மீது பழியைப் போடுகிறார் என்று அவர் கூறினார்.

ஆனால் அவரது மனைவி அனைத்தையும் மறுத்தார். இதுகுறித்து அவர் கூறும் போது :-

நான் எனது சொந்த விருப்பத்தின் பேரில் ஓட்டலுக்கு வரவில்லை.எனது கணவர் தான் அழைத்து வந்தார். அவர் என்னை உள்ளூர் தலைவரிடம் அனுப்பி இன்று வழக்கை முடிக்கச் சொன்னார். நான் அங்கு சென்றதும், அவர் தனது நண்பர்களுடன் வந்து எங்களை அடிக்கத் தொடங்கினார் என கூறினார்.

திருமணமான பெண்ணிடம் மாட்டிக் கொண்டு நடுரோட்டில் அடித்து நொறுக்கப்பட்ட உள்ளூர் தலைவர், அவருக்கு எதிரான 'சதி' என்று கூறினார். வழக்கை விவாதிக்க தான் அங்கு அழைக்கப்பட்டதாகவும், அந்த பெண்ணுடன் அறையில் நேரத்தை செலவிடவில்லை என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com