காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடைபெறுகிறது
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையும் நிரம்பியநிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இதில் பங்கேற்பதற்காக நீர் வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், தமிழக அரசு வழக்கறிஞர்கள், புதுடெல்லி சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story