இன்று முதல் 25-ந் தேதி வரை 'நல்லாட்சி வாரம்' கடைப்பிடிப்பு: மத்திய அரசு ஏற்பாடு


இன்று முதல் 25-ந் தேதி வரை நல்லாட்சி வாரம் கடைப்பிடிப்பு: மத்திய அரசு ஏற்பாடு
x

கோப்புப்படம்

இன்று முதல் 25-ந் தேதி வரை ‘நல்லாட்சி வாரம்’ கடைப்பிடிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் இன்று முதல் 25-ந் தேதி வரைநல்லாட்சி வாரமாக கடைப்பிடிக்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், தாலுகா அளவில் இதுதொடர்பான முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளில், 700-க்கு மேற்பட்ட மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொள்கிறார்கள். உயர் அதிகாரிகள் தாலுகா தோறும் சென்று குறைதீர்ப்பு முகாம்களை பார்வையிடுகிறார்கள்.

டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங், இந்த வாரத்தை தொடங்கிவைக்கிறார்.

மத்திய அரசின் குறைதீர்ப்பு இணையதளத்தில் 81 லட்சத்து 27 ஆயிரம் கோரிக்கை மனுக்களும், மாநில அரசுகளின் குறைதீர்ப்பு இணையதளங்களில் 19 லட்சத்து 48 ஆயிரம் கோரிக்கை மனுக்களும் கிடைத்துள்ளன.

நல்லாட்சி வாரத்தின்போது, இருதரப்பு இணையதளங்களும் இணைந்து செயல்பட்டு, மக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைக்கும்.

மேலும், நாடு முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் 3 ஆயிரத்து 120 புதிய சேவைகளை அடையாளம் கண்டுள்ளனர். அந்த சேவைகள், ஆன்லைன் சேவையில் சேர்க்கப்பட உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


Next Story