பெண்களை கவுரவிக்கும் நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு
விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பெண்களை கவுரவிக்கும் விதமாக நாரி சக்தி புரஸ்கார் விருதுகளை வழங்கி வருகிறது. தொழில்துறை, விவசாயம், கண்டுபிடிப்பு, சமூகப்பணி, கல்வி, கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் அசாதாரண பங்களிப்பை அளித்த பெண்களையும், நிறுவனங்களையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
அதன்படி 2022-ம் ஆண்டுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருதுகளுக்கு தகுதியான பெண்கள், தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் www.awards.gov.in. என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story