பல்வேறு துறைகளில் நடந்த கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.364 கோடி வருவாய் - மத்திய அரசு தகவல்


பல்வேறு துறைகளில் நடந்த கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.364 கோடி வருவாய் - மத்திய அரசு தகவல்
x

பல்வேறு துறைகளில் நடந்த கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் அரசுக்கு ரூ.364.53 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு துறைகளில் கடந்த மாதம் 2-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை சிறப்பு தூய்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் நீண்ட காலமாக தேங்கிக்கிடந்த கழிவுப்பொருட்கள் அகற்றுதல், பழமையான கோப்புகள் ஆய்வு செய்து அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.

ஒரு மாதமாக நடந்த இந்த பணிகளில் கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் அரசுக்கு ரூ.364.53 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இதைப்போல பழமையான கோப்புகளை அப்புறப்படுத்தியதன் மூலம் 88.05 லட்சம் சதுர அடி இடமும் காலியாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக ராணுவ நலத்துறையில் இருந்து ரூ.212.76 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

அடுத்ததாக நிலக்கரி அமைச்சகம் ரூ.48.51 கோடியும், ரெயில்வே அமைச்சகம் ரூ.33.05 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளன.இதைப்போல கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ரூ.14.82 கோடி, பாதுகாப்பு உற்பத்தி துறை ரூ.13.06 கோடியும் ஈட்டியுள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.


Next Story