சந்திரயான்-3 தரையிறக்கம் நேரலை: சிறப்பு ஏற்பாடு செய்ய உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்.!


சந்திரயான்-3 தரையிறக்கம் நேரலை: சிறப்பு ஏற்பாடு செய்ய உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்.!
x

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆனது இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது.

புதுடெல்லி,

இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பூமியின் சுற்றுவட்டப்பாதை உயர்த்துதல், நிலவின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு மற்றும் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து 'விக்ரம்' லேண்டர் பகுதியை தனியாக பிரிப்பது என பல கட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆனது இன்று மாலை 6.04 மணி அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை நேரலையில் காணலாம் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

அதன்படி, தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காண சிறப்பு ஏற்பாடு செய்யுமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story